25 ஆக., 2012

இன்று பிறந்த குழந்தைக்கு...



உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ப்ளோரைட் வாசம்

உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் ரத்தம்

எனது உலகத்தில் இருந்து
எதுவுமில்லை உனக்கு

காற்றை
அழுக்குப்படுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்

வன்முறை அறியாத
இராணுவ வீரன்

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை

-பழநிபாரதி