25 மார்., 2012

நீயும்-நானும்


மூன்றடி பின் வாங்கி
முன்னங்கால் தூக்கி 
மெல்ல முட்டும் 
கிடாரிக்கனறாய்

வாலைக்குழைத்து 
மெல்ல ஆட்டி 
பொய்யாய் கடிக்கும் 
நாய்க்குட்டியாய்

முட்டிமோதி 
முரண்டு பிடித்து 
ஆர்ப்ரித்து அடங்கும் 
அலையாய்

 நீயும் நானும்.


 - விவேகா