29 ஜூலை, 2011

அரிதாரம்


யாரும் அறிந்து கொள்ள முடியாத
அரிதார அடுக்குகளால்
ஆகி போனதென் முகம்

நீங்கள் நினைத்திருக்கிறபடி
நானில்லை என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

நான் நானாயிருக்கிற சந்தர்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறதெனக்கு

மதிப்பிடுகள் அனைத்தும் 
மாறிப்போகிற கால ஓட்டத்தில்
நீங்கள் நினைத்திருக்கிறபடியே
நாளை நான் மாறிப்போகலாம்

யாரும் அறியாதபடி.
- விவேகா