![](https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/268390_265377746895638_2123758135_n.jpg)
உன்னைப் பார்த்து வர
காற்றில் அனுப்பிய முத்தம்
பட்டாம்பூச்சியானது
நீ குளிக்க வைத்திருந்த தண்ணீருக்கு
குனிந்து கொடுத்த முத்தம்
தாமரைப்பூவானது
கூந்தல் உலர்த்திய தென்றலை
தழுவிக் கொடுத்த முத்தம்
பனித்துளியானது
நீ நின்ற இடத்தை
வணங்கிக் கொடுத்த முத்தம்
துளசிச் செடியானது
உன்னைத் தொட்டுப் பார்க்க
அனுப்பிய முத்தம் மட்டும்
இன்னும் அலைந்துகொண்டே
இருக்கிறது
-பழநிபாரதி