உன் வரவு
என் மேனியெங்கும் பரப்பும்
மெல்லிய சந்தோஷம்
கள்ளவிழிப் பார்வையிலே
கரைந்து போகும் நேரம்
எவர் எவரோ உன்முகம் மறைக்க
மெளனமாய் ஏங்கும் மனசு
பேச ஆயிரமிருந்தும்
ஊமைகளாய் உதடுகள்
போய்வரேன் என சொல்ல
முடியாத வேதனை
இன்றைய இரவின்
நிச்சயம் பூக்கும் கவிதை
எழுதிய கவிதை புரட்டிப் பார்க்கையில்
மறுபடி மறுபடி உன் தரிசனம்
மனதின் பக்கங்களை
மயிலிறகாய் வருடும்
- விவேகா