22 நவ., 2011

இசைவானதொரு


இடமறிந்து பேசுகிற லாவகமோ
கனிவான சொற்களோ
நீ அறிந்ததில்லையோ என அஞ்சுகிறேன்

சட்டையென நீண்டு சொடுக்குகிறதுன் நாக்கு
குருதி கட்டிய தடிப்புகளாய் பரவுகிறது துக்கம்

குழைவான அன்பிற்கு
கூண்டில் அடைபட்ட கிளியாய் தவிக்கிறது மனது

உன்னிடம் கேட்பதெல்லாம்
விரிந்த வான்வெளி இல்லை
இசைவானதொரு கூடு.

-விவேகா