பேசாது பேசும் பெருவிழிகளுனக்கு...
உன் தோள் சாய்ந்து
கைவளையை வருடியபடி
மெளனமாய் கழிந்திருக்கின்றன
பல யெளவன பொழுதுகள்
காதலுக்கெதிரான கயவர்கள்
நம் நாவறுத்த பின்னும்
இன்றைக்கும்
பேசாது பேசுகின்றோம்
பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை
காதலின் மொழி மெளனமென்று.
-விவேகா